போக்குவரத்து விதிமீறல் 4 நாளில் 11,498 வழக்குகள்
பெங்களூரு: ஒரு வழிப்பாதையில் சென்றதன் மூலம், போக்குவரத்து விதிகளை மீறியது தொடர்பாக, நான்கே நாட்களில் 11,498 வழக்குகள் பதிவாகியுள்ளன. பெங்களூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மீதான நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். தினமும் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவாகின்றன. அதே போன்று, ஒரு வழிப்பாதையில் எதிர் திசையில் வரும் வாகனங்களால், விபத்து நடக்கிறது. வாகனங்களின் போக்குவரத்துக்கும் தொந்தரவு ஏற்படுகிறது என, புகார் வந்துள்ளது. எனவே ஒரு வழிப்பாதையில் செல்வோர் மீதான நடவடிக்கையை, போக்குவரத்து போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். பெங்களூரின் பல்வேறு இடங்களில், சோதனையில் ஈடுபட்டனர். ஒரு வழிப்பாதையில் சென்றது தொடர்பாக, ஜனவரி 21 முதல் 24 வரையிலான நான்கு நாட்களில், 11,498 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.