உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  உரிமம் இல்லாமல் செயல்பட்ட 14 தங்கும் விடுதிகளுக்கு சீல்

 உரிமம் இல்லாமல் செயல்பட்ட 14 தங்கும் விடுதிகளுக்கு சீல்

பெங்களூரு: பெங்களூரில் விதிகளை மீறி, உரிமமின்றி செயல்பட்டு வந்த 14 பி.ஜி., எனும் தங்கும் விடுதிகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. பெங்களூரில் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கிலான மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வேலைக்காகவே குடிபெயர்ந்துள்ளனர். ஏராளமானோர் பி.ஜி.,களில், தங்கி உள்ளனர். குறைந்த விலையில் உணவுடன் கூடிய தங்குமிடம் கிடைப்பதால் அவர்கள் பி.ஜி.,க்களையே தேர்ந்தெடுக்கின்றனர். எனவே, நகரில் பி.ஜி.,க்களின் தேவை என்பது அதிகமாக உள்ளது. இதனால், அடுக்குமாடி வீட்டின் உரிமையாளர்கள், சிலர் தங்கள் வீட்டையே, பி.ஜி.,யாக மாற்றி வாடகை விடுகின்றனர். அதாவது, எந்த ஒரு அனுமதியும் வாங்காமல் சட்டத்திற்கு புறம்பாக வணிக நோக்கில் செயல்படுகின்றனர். இங்கு சுத்தமான குடிநீர், இடம், திடக்கழிவு மேலாண்மை ஆகியவை பெரும்பாலும் இருக்காது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. அதிரடி சோதனை இதுபோன்ற, பி.ஜி.,க்களை அடையாம் காணும் பணியில் நேற்று கிரேட்டர் பெங்களூரு ஆணைய அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் சோதனை நடத்தினர். உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த மஹாதேவபுரா சட்டசபை தொகுதியில் உள்ள பட்டந்துார் அக்ரஹாராவின் எஸ்.வி.கே., வம்சி கிருஷ்ணா, நாகப்பா ரெட்டி லே - அவுட் டுவெல் கோ லிவிங், ஒயிட்பீலடு மைத்ரா லே - அவுட் ராயல் ஹோம்ஸ் ஸ்டே, பிரசாந்த் லே - அவுட் ட்ரீம் லேண்ட், மாரத்தஹள்ளியின் சோலோ அம்சி, கே.ஆர்., ஆண்கள்; கே. ஆர்., புரம் சட்டசபை தொகுதியில் உள்ள ஹொரமாவு ஸ்ரீ எஸ்.ஜி., துாரவாணி நகர் செயின்ட் மரியா, ஷராவதி லே - அவுட் எஸ்.எல்.வி., கம்பர்ட்ஸ், பசவனபுரா ஸ்ரீ கணேஷ், லக் ஷ்மி சாகர் லே - அவுட் எஸ்.எஸ்.வி., டவர், ஸ்ரீ கிருஷ்ணா கார்டன் லே - அவுட் பிளிஸ் கோ லிவிங், சத்ய படவனே வி.டி.எஸ்., ஆகிய 14 பி.ஜி.,க்களுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். லட்சங்களில் வருவாய் இதுகுறித்து, பெங்களூரு கிழக்கு மாநகராட்சி கமிஷனர் ரமேஷ் கூறியதாவது: மாநகராட்சியின் விதிகளை மீறி, உரிமம் இல்லாமல் செயல்பட்ட 14 பி.ஜி.,க்கள் 'சீல்' வைக்கப்பட்டன. இங்கு தங்கியிருந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. பெங்களூரு கிழக்கு மாநகராட்சியில் உள்ள சில பி.ஜி., உரிமையாளர்கள், கடந்த 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் பங்கேற்று தங்கள் பி.ஜி.,க்களை முறையாக பதிவு செய்து கொண்டனர். பி.ஜி.,க்கள் பதிவு செய்வதற்கு ஒரு நாள் மட்டுமே ஆனது. மொத்தம் 466 உரிமையாளர்கள் முறைப்படி பதிவு செய்தனர். இதன்மூலம் 25.52 லட்சம் வருவாய் கிடைத்தது.இதனால், இடைத்தரகர்களுக்கு பி.ஜி., உரிமையாளர்கள் எந்த கமிஷனும் தர வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை