உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கேபிள் திருட்டு 2 பேர் கைது

 கேபிள் திருட்டு 2 பேர் கைது

தங்கவயல் ஏப். 7--: போர்வெல் கேபிள் திருட்டு வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். தன் நிலத்தில், 410 மீட்டர் போர்வெல் கேபிள் திருடப்பட்டதாக, ஸ்ரீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணப்பா என்பவர் பேத்தமங்களா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போலீசார் விசாரித்தனர். ஜீடமாக்கனஹள்ளி கிராமத்தின் சலபதி, 37, பந்தனஹள்ளி கிராமத்தின் பாபு, 47, கைது செய்யப்பட்டனர். 80,600 ரூபாய் மதிப்புள்ள 310 மீட்டர் கேபிள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை