மேலும் செய்திகள்
பள்ளி வாகனங்கள் ஆய்வு
09-May-2026
மைசூரு: மோசமான நிலையில் இருந்த, தனியார் பள்ளிகளின் இரண்டு வாகனங்களை ஆர்.டி.ஓ., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மைசூரு நகரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செலும் வாகனங்களை, ஆர்.டி.ஓ., அதிகாரிகள் நேற்று சோதனையிட்டனர். 20க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் சோதனையிடப்பட்டன. இதில், மோசமான நிலையில் இருந்த இரண்டு தனியார் பள்ளி பஸ்கள் இரண்டு பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து, கூடுதல் ஆர்.டி.ஓ., அதிகாரி ராஜ்குமார் கூறியதாவது: விபத்தை ஏற்படுத்தக்கூடிய மோசமான நிலையில் இருந்த தனியார் பள்ளி பஸ்கள் இரண்டு பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்களின் எப்.சி., காலாவதியாகி விட்டது. இது போன்று, நகரில் மோசமான நிலையில் உள்ள, 138 பள்ளி வாகனங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. நோட்டீஸ் வழங்கப்பட்ட வாகனங்களில் உள்ள குறைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். இல்லையெனில், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.
09-May-2026