சீர்திருத்த பள்ளியில் இருந்து 2 மாணவர்கள் தப்பியோட்டம்
தங்கவயல்: சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த, இரண்டு மாணவர்கள், வார்டன்களை குக்கர் மூடியால் தாக்கி விட்டு, தப்பியுள்ளனர். தங்கவயல் மஸ்கம் பகுதியில் சிறுவர் சீர்திருத்த பள்ளி உள்ளது. கடந்த, 16ம் தேதி இரவு ஒரு அறையில் இருந்து, இரண்டு மாணவர்கள் கூச்சலிட்டனர். வார்டன் சோமசேகர் அறை கதவை திறந்து உள்ளே சென்றார். திடீரென குக்கர் மூடியை எடுத்து அவரை, இரண்டு மாணவர்களும் தாக்கினர். அவரது சத்தம் கேட்டு இன்னொரு வார்டன் மஞ்சுநாத் வந்தார். அவரையும் தாக்கிவிட்டு, இரு மாணவர்களும் தப்பினர். காயம் அடைந்த வார்டன்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வார்டன் பொறுப்பாளர் அளித்த புகாரில், தப்பியோடிய சிறுவர்களை போலீஸ் தேடுகிறது. தப்பிய இரு மாணவர்களும், 16 - 17 வயது நிரம்பியவர்கள்.