உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மண் திருட்டு 2 லாரிகள் பறிமுதல்

 மண் திருட்டு 2 லாரிகள் பறிமுதல்

தங்கவயல்: தங்கவயல் பெமல்நகர் - பேத்தமங்களா சாலையில் கிருஷ்ணாபுரம் கிராமத்தில், 'ேஹப்பி ஹோம்' ஆதரவற்றோர் காப்பகம் அருகில், தங்கச் சுரங்க நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக மண்ணை வெட்டி எடுத்து லாரிகளில் நிரப்பி செல்வதாக தங்கச் சுரங்க அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இது பற்றி, தங்கச் சுரங்க அதிகாரிகள் பெமல் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். சோதனையில் அனுமதியின்றி மண்ணை வெட்டி எடுத்து சென்ற இரண்டு லாரிகளை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ