உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  காலை சிற்றுண்டி சாப்பிட்ட 20 மாணவர்கள் பாதிப்பு

 காலை சிற்றுண்டி சாப்பிட்ட 20 மாணவர்கள் பாதிப்பு

கலபுரகி: கலபுரகி மாவட்டம், கரஜகி கிராமத்தில், மொரர்ஜி தேசாய் உறைவிடப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நேற்று காலை மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் 20 மாணவர்கள் வயிற்று வலியால் அவதிப்பட்டதுடன் வாந்தி எடுத்தனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள், உடனடியாக அப்சல்பூர் தாலுகா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த மாவட்ட சுகாதார துறை, சமூக நலத்துறை அதிகாரிகள், மருத்துவமனைக்கு வந்து குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். மாணவர்கள் நலமாக உள்ளதாக டாக்டர்கள் கூறினர். அத்துடன், பள்ளி சமையல் அறையின் குடிநீர், தயாரித்த உணவுகள் மாதிரிகள், ஆய்வகத்துக்கு எடுத்து செல்லப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை