உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டு

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டு

தாவணகெரே: தாவணகெரே மாவட்டம், ஹொன்னாளி தாலுகாவின், ஜி.கடதகட்டே கிராமத்தில் வசிப்பவர் சந்திரப்பா, 25. இவர் கடந்தாண்டு நியாமதி தாலுகாவின், கிராமம் ஒன்றில் வசிக்கும் 16 வயது சிறுமியை, கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பிணியானார். இது கு றித்து, அவரது பெற்றோர் அளித்த புகாரின்படி, சந்திரப்பாவை போலீசார் கைது செய்தனர். விசாரணையை முடித்து, தாவணகெரே நகரின் கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் இவரது குற்றம் உறுதியானதால், இவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, 35,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று முன்தினம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !