மேலும் செய்திகள்
சிறுமி பலாத்கார வழக்கு தொழிலாளிக்கு சிறை
30-Jan-2025
பெங்களூரு: பெங்களூரின் பொம்மனஹள்ளியில் வசிப்பவர் ஆட்டோ ஓட்டுநர் நவாஜ்கான் என்ற காலு, 28. இவர் 2023 மே 6ம் தேதி, பன்னரகட்டா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 13 வயது சிறுமியை, வீட்டில் கொண்டு விடுவதாக நம்ப வைத்து, ஆட்டோவில் தன் வீட்டுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தார். இது தொடர்பான வழக்கு பெங்களூரின் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது.நவாஜ்கானின் குற்றம் உறுதியானதால், அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, 25,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
30-Jan-2025