உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  குத்தகைக்கு விடப்பட்டுள்ள 220 சொத்துகள்

 குத்தகைக்கு விடப்பட்டுள்ள 220 சொத்துகள்

சொத்து  சென்ட்ரல் மாநகராட்சியின் அதிகார வரம்பில், 438 சொத்துக்கள் உள்ளன. இவற்றில் இருந்து மாதம், 58 கோடி ரூபாய் வாடகை வருவாய் எதிர்பார்க்கிறோம். 438 சொத்துகளில், 220 சொத்துக்கள் தற்போது குத்தகைக்கு விடப்பட்டு உள்ளன. குத்தகை விதிகளை மீறி உள்ள சொத்துக்களை கண்டறிந்து, மீண்டும் மாநகராட்சியின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும்.  மாநகராட்சியின் வருவாயை பெருக்க நாங்கள் நிதி வளங்களை திரட்டுவோம். மாநகராட்சிக்கு சொந்தமான காலியாக உள்ள கட்டடங்கள், கடைகள், அலுவலகங்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவோம். பயன்பாடின்றி இருக்கும் கட்டடங்களை வணிக கடைகள் அல்லது அலுவலகமாக மாற்றி, ஐந்து முதல் 30 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விடுவது மாநகராட்சியின் நோக்கம்.  சொத்து ஆவணங்கள் முறையா க நிர்வகிக்கப்படும். மாநகராட்சியின் சொத்துக்களை யாரும் ஆக்கிரமிக்காத வகையில் வேலி அமைத்து பாதுகாக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை