உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தேனீக்கள் கொட்டியதில் 25 பேர் காயம்

 தேனீக்கள் கொட்டியதில் 25 பேர் காயம்

தாவணகெரே: ரம்ஜான் பண்டிகையான நேற்று தொழுகையில் ஈடுபட்டவர்களை தேனீக்கள் கொட்டியதில், 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தாவணகெரே அனகோடு கிராமத்தில், ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று ஏராளமான முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர். அப்பகுதிக்கு அருகிலுள்ள மரத்தில் இருந்த தேனீ கூட்டை அடையாளம் தெரியாத சிலர் வேண்டுமென்றே கலைத்து விட்டனர். தேன் கூட்டில் இருந்து வெளியேறிய தேனீக்கள், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை கொட்டின. பலரும் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடினர். இருப்பினும், தொழுகையில் ஈடுபட்ட, 25க்கும் மேற்பட்டோர் தேனீக்களிடம் கொட்டு வாங்கினர். அதில், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஐந்து பேரின் உடல் நிலை மட்டும் கவலைக்கிடமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !