மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்...
25-Sep-2025
ஹீரோ நிறுவனத்துக்கு புதிய சி.இ.ஒ.,
10-Sep-2025
சிக்கபல்லாபூர்: நீச்சல் அடித்து விளையாட ஏரிக்குச் சென்ற, மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிக்கபல்லாபூர் மாவட்டம், பாகேபள்ளி தாலுகாவின், ஆச்சேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் விஷ்ணு, 14, நிஹால் ராஜ், 12, ஹர்ஷவர்தன், 16. தசராவையொட்டி பள்ளிக்கு விடுமுறை என்பதால், வீட்டில் இருந்தனர். நேற்று மதியம் நீச்சலடித்து விளையாட, கிராமத்தின் ஏரிக்கு சென்றனர். விஷ்ணுவுக்கும், நிஹால் ராஜுக்கும் நீச்சல் தெரியாது. ஆனால் நீரில் இறங்கி, நீச்சலடிக்க முயற்சி செய்தனர். இதனால் அவர்கள் நீரில் மூழ்கினர். நண்பர்களை காப்பாற்றச் சென்ற ஹர்ஷவர்தனும், மூழ்கியதில் மூவரும் உயிரிழந்தனர். தகவலறிந்த பாகேபள்ளி போலீசார், தீயணைப்புப் படையினரின் உதவியுடன், சிறுவர்களின் உடல்களை தேடுகின்றனர்.
25-Sep-2025
10-Sep-2025