உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தமிழக எஸ்.ஐ.,யிடம் கொள்ளை 3 வாலிபர்கள் அதிரடி கைது

தமிழக எஸ்.ஐ.,யிடம் கொள்ளை 3 வாலிபர்கள் அதிரடி கைது

மைசூரு : மைசூரு - பெங்களூரு சாலையில் கத்திமுனையில் தமிழக போலீஸ், அவரது குடும்பத்தினரை மிரட்டி கொள்ளையடித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தின் நீலகிரி மாவட்டம், சேரம்பாடி போலீஸ் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் ஷாஜி. தனது மனைவி மெர்லின், இளைய மகன் எபின் ஷாஜி, மகள் எமில்டா ஷாஜி. இவரின் மூத்த மகன் எட்வின் ஷாஜி. இவர், பெங்களூரு ஹலசூரில் உள்ள தாஜ் ஹோட்டலில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சி எடுத்து வருகிறார். மகனை அழைத்து வருவதற்காக, குடும்பத்தினருடன் ஷாஜி, பெங்களூரு வந்தார். நீண்ட துாரம் அவரே காரை ஓட்டி வந்ததால், நேற்று முன்தினம் மைசூரு - பெங்களூரு சாலையில் சென்னபட்டணா பைபாஸ் அருகில் லம்பனிதண்டியா கிராமம் அருகில் அதிகாலை 2:00 மணியளவில் காரை நிறுத்தினார். இரண்டு நிமிடங்களில் அவரின் காரின் அருகில் மற்றொரு ஜீப் வந்து நின்றது. மைசூரு செல்வதற்கான வழி கேட்டனர். தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். அங்கிருந்து அவர்கள் சென்ற 10 நிமிடங்களில், ஸ்கூட்டரில் வந்த மூன்று பேர், கத்தியை காட்டி, தங்க நகைகள், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம், இரண்டு மொபைல் போன்கள் என, 1.35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக, ரோந்து போலீசாருக்கு ஷாஜி தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு வந்த அவர்கள், விபரம் கேட்டறிந்தனர். பின், சென்னபட்டணா ரூரல் போலீசில் ஷாஜி புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் கொள்ளையடித்த இரண்டு மொபைல் போன்களில் ஒன்று சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மற்றொரு மொபைல் போனின் சிக்னல், ராம்நகரில் இருப்பதை காண்பித்தது. அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தபோது, குற்றவாளிகள் யார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, ராம்நகரின் தன்வீர் பாஷா, 32, பெங்களூரு தெற்கின் பைரோஷ் பாஷா, 28, சென்னபட்டணா டவுனை சேர்ந்த சையது தன்வீர், 30, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை