கர்நாடகாவில் 324 பேர் கொரோனாவால் பாதிப்பு
பெங்களூரு : கர்நாடகாவில் 324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.கர்நாடகாவில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:மாநிலத்தில் நேற்று மட்டும் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 40 பேர் குணம் அடைந்து உள்ளனர். 675 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளோர் 7.8 சதவீதம் பேர்.தற்போது மாநிலத்தில் 324 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 319 பேர் வீட்டில் தனிமை படுத்தப்பட்டு உள்ளனர். ஐந்து பேர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், ஒருவருக்கு மட்டும் உடல்நிலை மோசமாக உள்ளது. இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை நான்கு.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.