உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / துபாயில் இருந்து கடத்திய 3.50 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

துபாயில் இருந்து கடத்திய 3.50 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

தேவனஹள்ளி: துபாயில் இருந்து பெங்களூருக்கு கடத்தி வரப்பட்ட 3.50 கிலோ தங்க கட்டிகள் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. டி.ஆர்.ஐ., அதிகாரிகளிடம் சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில், இன்னொரு பயணியின் டிராலியில், தங்க கட்டிகளை வைத்துவிட்டு, கடத்தல்காரர் தப்பி உள்ளார். பெங்களூரு தேவனஹள்ளி கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து நேற்று முன்தினம் இரவு, விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், தன் லக்கேஜ்களை டிராலியில் வைத்து வெளியே எடுத்து வந்தார். அப்போது டிராலியில் இருந்து பிளாஸ்டிக் பை விழுந்தது. அந்த பையை பிரித்து பார்த்தபோது, அதற்குள் தங்க கட்டிகள் இருந்தன. அதிர்ச்சி அடைந்த பயணி, டி.ஆர்.ஐ., எனும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் தங்க கட்டிகளை ஒப்படைத்தார். அது 3.50 கிலோ இருந்தது. துபாயில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்த நபர், டி.ஆர்.ஐ., அதிகாரிகளிடம் சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில், தங்க கட்டிகளை, இன்னொரு பயணியின் டிராலியில் வைத்துவிட்டு, விமான நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது. அந்த நபரின் அடையாளத்தை கண்டறிய, விமான நிலையத்தில் உள்ள, கண்காணிப்பு கேமராக்களை, டி.ஆர்.ஐ., அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை