உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  3 பேர் மீது 3,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

 3 பேர் மீது 3,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

பெங்களூரு: மாநிலம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை, அமலாக்கத்துறை விசாரிக்கிறது. கடந்த மே மாதம் ஹேக்கர் ஸ்ரீகிருஷ்ணா, அவரது கூட்டாளிகள் சுனிஷ் ஹெக்டே, ராபின் கண்டேவாலா கைது செய்யப்பட்டனர். சாந்திநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹாரிஸ் மகன்கள் முகமது நலபட், ஓமர் நலபட் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் பிட்காயின் மோசடி வழக்கு தொடர்பாக, ஸ்ரீகிருஷ்ணா, சுனிஷ் ஹெக்டே, ராபின் கண்டேவாலா மீது பணமோசடி தடுப்பு சட்ட வழக்குகள் குறித்து விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், 3,500 பக்க குற்றப்பத்திரிகையை, நேற்று அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் ஸ்ரீகிருஷ்ணாவை முதல் குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ளனர். இவர், கிரிப்டோகரன்சியை பரிமாற்றம் செய்தது எப்படி; ஆன்லைன் கேமிங் செயலிகளை செய்தது எப்படி; கர்நாடக அரசின் இ - பிராக்கியூர்மென்ட் இணையதளத்தை ஹேக் செய்து 11.50 கோடி ரூபாயை சுருட்டியது எப்படி என்பது பற்றி கூறப்பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ணாவை பல நிறுவனங்களின் இணையதளங்களை ஹேக் செய்ய வற்புறுத்தியது சுனிஷ் ஹெக்டே தான் என்றும், ஸ்ரீகிருஷ்ணாவுக்கு ஆடம்பர வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்ததும் அவர் தான் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச கிரிப்டோகரன்சி வர்த்தகரான ராபின் கண்டேவாலா, ஸ்ரீகிருஷ்ணா ஹேக் செய்து திருடி கொடுக்கும், பிட்காயின்களை விற்று அதில் கிடைத்த பணத்தை மாற்றியதற்கு எப்படி பணியாற்றினார்; யார், யார் வங்கிக்கணக்கிற்கு எவ்வளவு சென்றது என்ற விபரங்களும் உள்ளன. முகமது நலபட் பெயர் இது தவிர, ஸ்ரீகிருஷ்ணாவின் வாட்ஸாப் உரையாடல்கள், சர்வதேச நிறுவனங்களும் அவர் அனுப்பிய பணம்; டிஜிட்டல் ஆதாரங்கள், வெளிநாட்டு சிம்கள், அதிநவீன மென்பொருட்கள் வாங்கியது எப்படி என்பது உட்பட பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த குற்றப்பத்திரிகையில் முகமது நலபட், ஓமர் நலபட் பெயர்கள் இல்லை. தற்போது தான் அவர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அடுத்த குற்றப்பத்திரிகையில் இவர்கள் பெயர்களும் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. பிட்காயின் மோசடியை விசாரிக்க, கர்நாடக அரசு அமைத்த எஸ்.ஐ.டி., குழு தாக்கல் செய்த அறிக்கையில், முகமது நலபட் பெயர் இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை