உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வேலை மோசடி வழக்கு மேலும் 4 பேர் கைது

 வேலை மோசடி வழக்கு மேலும் 4 பேர் கைது

பசவேஸ்வராநகர்: பெங்களூரு, பசவேஸ்வரா நகரில் வசிக்கும் சமர்த், 30 என்பவரிடம், நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கை விசாரித்த, சி.சி.பி., போலீசார், பெங்களூரின் ஜேசன் டிசோசா, அவரது மனைவி லவினா ஆகியோரை கடந்த 22ம் தேதி கைது செய்தனர். விசாரணையில் 500 பேரிடம் இருந்து 25 கோடி ரூபாய் வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இந்த வழக்கி ல் தலைமறைவாக இருந்த ஜேசன் டிசோ சாவின் கூட்டாளிகள் வெங்கட ரெட்டி, திப்பேசாமி, சித்தலிங்கையா, அவரது மனைவி விஜயா ஆகியோரை நேற்று சி.சி.பி., போலீசார் கைது செய்தனர் . ஜேசனிடம் வேலை செய்த இவர்கள் நான்கு பேரும், வேலை தேடி அலையும் பட்டதாரிகளை குறி வைத்து, நீதிமன்ற வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டுவர். வேலைக்கு ஆசைப்படுவோரிடம் பணம் வசூலித்து, ஜேசன், லவினாவுக்கு கொடுப்பது தான் இவர்கள் வேலை. இதற்காக அவர்களுக்கு கமிஷனும் கிடைத்தது விசாரணையில் தெரிந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை