உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அதிக ஒலி எழுப்பிய பைக்குகளில் 40 சைலன்சர்கள் அழிப்பு

 அதிக ஒலி எழுப்பிய பைக்குகளில் 40 சைலன்சர்கள் அழிப்பு

ஹாவேரி: பைக்குகளில் பயன்படுத்தப்பட்ட அதிக சத்தம் எழுப்பிய 40 சைலன்சர்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டன. ஹாவேரி மாவட்டத்தில் வாகன ஓட்டிகள், பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில், அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களுக்கு எதிராக போலீசார் கடந்த வாரம் சோதனை செய்தனர். இதில், அதிக சத்தம் எழுப்பிய, 40 பைக்குகள் சிக்கின. அவற்றின், சைலென்சர்கள் தனியாக அப்புறப்படுத்தப்பட்டு, நேற்று பொக்லைன் மூலம் அழிக்கப்பட்டன. இது குறித்து, மாவட்ட எஸ்.பி., யசோதா கூறியதாவது: அதிக சத்தம் எழுப்பும் சைலென்சர்களால் ஒலி மாசுபாடு ஏற்படுகிறது. அதிக சத்தம் எழுப்பும் 40 சைலென்சர்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து, அவற்றை அழித்தனர். அதிக சத்தம் எழுப்பும் சைலென்சர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும். இதை, வாகன ஓட்டிகள் உறுதி செய்ய வேண்டும். அதிக ஒலி எழுப்பும் சைலென்சர்களை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் பைக்குகளும் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை