உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரு ஏரிகளில் விநாயகர் சிலைகள் கரைக்க 41 தெப்பக்குளங்கள், 489 மொபைல் டேங்கர்கள்

பெங்களூரு ஏரிகளில் விநாயகர் சிலைகள் கரைக்க 41 தெப்பக்குளங்கள், 489 மொபைல் டேங்கர்கள்

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி பகுதியில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக 41 தெப்பக்குளங்கள், 489 மொபைல் டேங்கர்கள் தயார் நிலையில் உள்ளன. பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாநகராட்சி நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. பூஜை செய்யப்பட்ட பின், விநாயகர் சிலைகளை கரைக்க பெங்களூரில் 41 தெப்பக்குளங்கள் தயார் நிலையில் உள்ளன. 489 தற்காலிக மொபைல் டேங்கர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிலைகள் கரைப்பதை ஆய்வு செய்வதற்காக நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். முந்தைய ஆண்டுகளை போலவே ஹலசூரு உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குளங்களின் வளாகத்தில் கண்காணிப்பு கேமரா, மின் விளக்கு சேவை பொருத்தப்பட்டு உள்ளது. நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் பணியில் அமர்த்தப்படுவர். சிலைகள் கரைக்கும்போது சேகரிக்கப்படும் கழிவுகள் ஆட்டோ டிப்பர்கள் மூலம் அகற்றப்படும். ஹலசூரு ஏரியில் இன்று முதல் 30ம் தேதி வரையும்; எடியூர் ஏரியில் இன்று முதல் அடுத்த மாதம் 7ம் தேதி வரையும்; ஹெப்பால் ஏரியில் இன்று முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரையும்; சாங்கே ஏரியில் இன்று முதல் அடுத்த மாதம் 4ம் தேதி வரையும் சிலைகள் கரைக்கலாம். அனைத்து ஏரிகளிலும் களிமண்ணால் செய்யப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள் மட்டுமே கரைக்க அனுமதிக்கப்படும். ஹலசூரு ஏரியில் அடுத்த மாதம் 1, 2, 8, 9 ஆகிய தேதிகளில் ஏரியில் துார்வாரும் பணிகள் நடப்பதால், சி லைகள் கரைக்க அனுமதி கிடையாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !