மேலும் செய்திகள்
'தமிழ்நாடு' என்ற வார்த்தை அரசு பஸ்களில் நீக்கம்
04-Jun-2025
பெங்களூரு: கர்நாடகாவில் 'சக்தி' திட்டத்தின் கீழ், இரண்டு ஆண்டுகளில் 475 கோடி பெண்கள், அரசு பஸ்களில் இலவச பயணம் செய்துள்ளனர்.கர்நாடகாவில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்யும், 'சக்தி' திட்டம் 2023ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. கடந்த 11ம் தேதியுடன் திட்டத்தை அமல்படுத்தி இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ளன.இந்த திட்டம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:'சக்தி' திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இலவச பஸ் பயண திட்டத்தை பயன்படுத்தி பெண்கள், ஆன்மிக தலங்களுக்கு சென்று வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் 474 கோடியே 82 லட்சத்து 49 ஆயிரத்து 843 பெண்கள் இலவச பயணம் செய்துள்ளனர். ஒரு நாளைக்கு சராசரியாக 65 லட்சம் பெண்கள் இந்த திட்டம் மூலம் பயன் அடைந்துள்ளனர்.இரண்டு ஆண்டுகளில் பெண் பயணியருக்கு 11,994 கோடி ரூபாய்க்கு டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆண்களையும் சேர்த்து, இரண்டு ஆண்டுகளில் 801.54 கோடி பயணம் செய்திருக்கின்றனர்.பெண் பயணியருக்கு டிக்கெட் விநியோகம் செய்ததில் கே.எஸ்.ஆர்.டி.சி., 4,556 கோடி ரூபாயுடன் முதலிடத்திலும்; வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்துக் கழகம் 2,968 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்திலும்; கல்யாண கர்நாடகா சாலை போக்குவரத்துக் கழகம் 2,408 கோடி ரூபாயுடன் மூன்றாவது இடத்திலும்; பி.எம்.டி.சி., 2,061 கோடி ரூபாயுடன் நான்காம் இடத்திலும் உள்ளன.அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும், உரிய நேரத்தில் அரசு பணம் செலுத்தி உள்ளது. இலவச பயணம், எரிசக்தி திட்டம் குறித்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த போக்குவரத்து அமைச்சர்கள், நமது மாநில அரசின் ஆலோசனையை பெற்றுச் சென்றுள்ளனர்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
04-Jun-2025