உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக புதிதாக 7 பிசியோதெரபி மையங்கள்

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக புதிதாக 7 பிசியோதெரபி மையங்கள்

 சுகாதார பெங்களூருக்கு 413 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, அடுத்த இரண்டு ஆண்டுக்குள் செலவிடப்படும். 852 படுக்கை வசதிகளுடன் 19 மருத்துவமனைகள், 1,122 படுக்கை வசதிகளுடன் மேம்படுத்தப்படும். நம்ம கிளினிக், யு.பி.ஹெச்.சி., மையங்களில் 60 வித இலவச ரத்த பரிசோதனைகள். பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 26 பல் மருத்துவமையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஏழைகள், குடிசைப்பகுதியில் வசிப்பவர்கள், புலம் பெயர்ந்தோர் போன்றவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்காக, 144 எலக்ட்ரானிக் வாகனங்கள் மூலம் மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன. மாரடைப்பு, அவசர கால சூழ்நிலைகளின் பாதிக்கப்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை வழங்குவதற்காக 26 பி.எல்.எஸ்., எனும் அடிப்படை வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. நகரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக புதிதாக ஏழு பிசியோதெரபி மையங்கள் துவங்கப்படும். ஏ.ஐ., டெக்னாலஜி மூலம் கர்ப்பிணியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் புதிய திட்டம் துவங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் முதற் கட்டமாக 200 கர்ப்பிணியர் பயன்பெறுவர். எம்.சி., லே ---- அவுட்டில் உள்ள மருத்துவமனை வளாகத்தில், 633 கோடி ரூபாயில் புதிதாக மருத்துவ கல்லுாரி அமைக்க அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மாநகராட்சிக்கு உட்பட்ட ஆறு மண்டலங்களில் கால்நடை மருத்துவமனைகள்; பொம்மனஹள்ளி, மஹாதேவபுரா மண்டலங்களில் 7.5 கோடி ரூபாய் செலவில் புதிதாக விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையங்கள்; எலஹங்காவில் நாய்கள் கண்காணிப்பு மையம்; மூன்று மண்டலங்களில் இறந்த விலங்குகளை தகனம் செய்யும் மையங்கள் அமைக்கப்படும். இறைச்சிக் கூடங்கள் ௫ கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்படும். புதிய இறைச்சி கூடங்கள் கட்டி, பராமரிப்பதற்கு 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. வணிகர்கள் வர்த்தக உரிமம் பெறுவதை சுலபமாக்க நவீன தொழில்நுட்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை