மேலும் செய்திகள்
ஏரியில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி பலி
25-May-2026
பீதர்: பீதரில், அறுந்து விழுந்த மின்சார ஒயரை பிடித்த, 8 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலியானார். ஹுலசூரு டவுனை சேர்ந்த அலி மோமின், 8, என்ற சிறுவன், தன் நண்பர்களுடன் நேற்று, வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, தொங்கிக் கொண்டிருந்த மின்சார கம்பியை, அலி மோமின் தொட்டவுடன், மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். உட னடியாக அவரது நண்பர்கள், அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். மகனை துாக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு பெற்றோர் சென்றனர். அலியை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 'ஜெஸ்காம் ஊழி யர்களின் அலட்சியமே மகன் இறப்புக்கு காரணம்' என, ஹுலசூரு போலீசில் பெற்றோார் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
25-May-2026