உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கலப்பட உணவு பொருட்கள் 846 கிலோ பறிமுதல்

கலப்பட உணவு பொருட்கள் 846 கிலோ பறிமுதல்

ராய்ச்சூர்: ராய்ச்சூரில் கலப்பட உணவுப்பொருட்கள் தயாரிப்பதை, சுகாதாரத்துறை கண்டுபிடித்துள்ளது. 800 கிலோவுக்கும் அதிகமான கலப்பட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ராய்ச்சூர் மாவட்டம், மான்வி தாலுகாவின் இஸ்லாம்புராவில் உணவு தானியங்களில் அபாயமான ரசாயனம் கலக்கப்படுவதாக, தகவல் வந்தது. அப்பகுதியினர் சுகாதாரத்துறையில் புகார் செய்தனர். இதையடுத்து அதிகாரிகள், மான்வியின் இஸ்லாம்புராவுக்கு சென்று சோதனை நடத்தினர்.குடோன் ஒன்றின் காலியிடத்தில், மஞ்சள் நிற ரசாயனம் கலக்கப்பட்ட துவரம் பருப்பு, மிளகில் பப்பாளி விதைகள், பட்டையில் ஏதோ ஒரு மரப்பட்டை, பிரியாணி இலைகளில் நீலகிரி இலை, ரசாயனம் கலக்கப்பட்ட மசாலா பொருட்களை பார்த்து அதிகாரிகளே அதிர்ச்சி அடைந்தனர். இந்த பொருட்களை பயன்படுத்தினால், புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும்.மஞ்சள் நிற ரசாயனம் கலக்கப்பட்ட 220 கிலோ துவரம் பருப்பு உட்பட, 846 கிலோ கலப்பட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.அதிகாரிகள் சோதனைக்கு வருவதை அறிந்து, கலப்பட பொருட்களை தயாரித்தவர்கள் தப்பியோடி விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ