பெண்ணின் பித்தப்பையில் 861 கற்கள் அகற்றம்
மைசூரு: மைசூரில் வயிற்று வலியுடன் வந்த 55 வயது பெண்ணின் பித்தப்பையில் இருந்து, 861 கற்கள் அகற்றப்பட்டன.மைசூரு நகரை சேர்ந்த 55 வயது பெண், வயிற்று வலி காரணமாக, காவேரி இதய மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்தபோது, அவரின் பித்தப்பையில் கற்கள் இருப்பது தெரிய வந்தது. 'காஸ்ட்ரோ என்டாலஜிஸ்ட்' எனும் இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் நிகில் குமார், லேப்ராஸ்கோபிக் நிபுணர் டாக்டர் அரவிந்த் தலைமையில் அறுவை சிகிச்சை நடந்தது.முதலில் பித்த நாளத்தில் இருந்தும்; இரண்டாவது நாளில், பித்தப்பையில் இருந்தும் மொத்தம் 861 கற்கள் அகற்றப்பட்டன. மறுநாள் அப்பெண் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார் என, மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.