உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சிகரெட் புகைத்ததால் வந்த சண்டை புதுமண தம்பதி உறவினர்கள் மோதல்

 சிகரெட் புகைத்ததால் வந்த சண்டை புதுமண தம்பதி உறவினர்கள் மோதல்

ஹாசன்: சிகரெட் புகைத்ததால் ஏற்பட்ட சண்டையால், நடுரோட்டில் புதுமண தம்பதியின் உறவினர்கள் மோதி கொண்டனர். ஹாசன் டவுன் அரக்கல்பேட் பகுதியில் உள்ள எம்.ஹெச்., திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் புதுமண தம்பதியின் திருமண வரவேற்பு நடந்தது. மணப்பெண்ணின் உறவினர் ஒருவர், திருமண மண்டபத்தில் வைத்தே சிகரெட் புகைத்து உள்ளார். இதை மணமகன் உறவினர்கள் தட்டி கேட்டதால், இரு தரப்புக்கும் ஏற்பட்ட வாய் தகராறு கைகலப்பாக மாறியது. மண்டபத்தில் இருந்து வெளியே வந்து, நடுரோட்டில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். நிலைமை விபரீதம் ஆனதால் பெரியவர்கள் தலையிட்டு சமாதானம் செய்தனர். மோதலில் இருவர் காயம் அடைந்தனர். போலீசில் யாரும் புகார் அளிக்கவில்லை. மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ