மேலும் செய்திகள்
சாய்பாபா, கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்
29-Apr-2025
மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டனாவில் அமைந்து உள்ளது. இக்கோவிலின் மூலவராக பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ரங்கநாத சுவாமியும், தாயார் ரங்கநாயகியும் இருக்கின்றனர். கோவிலின் தீர்த்தமாக காவிரி நீர் உள்ளது. ஐந்தில் ஒன்று
ஹிந்து மதத்தில் உள்ள முக்கியமான ஐந்து விஷ்ணு கோவில்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் கோவில் இயங்கி வருகிறது.இந்த கோவிலில் பழமையான கல்வெட்டு உள்ளது. இந்த கல்வெட்டின் மூலம், கோவிலின் துல்லியமான வரலாற்றை அறிய முடிகிறது. கி.பி., 984ம் ஆண்டில், மேற்கு வங்கத்தை சேர்ந்த திருமலையா என்பவரால் கோவில் கட்டப்பட்டது. இதன்பின், பல வம்சங்கள், ஆட்சியாளர்களின் கட்டுப்பாடில் கோவில் இருந்து உள்ளது. அந்தந்த ஆட்சியாளர்கள் தங்களது கலைத் திறமையையும் கோவில் மீது காட்ட தவறியதில்லை. இதன் விளைவே, கோவிலில் பல வகையான கட்டட கலைகளை பார்க்க முடிகிறது.கடந்த 12ம் நூற்றாண்டில், ஹொய்சாளா மன்னர் விஷ்ணுவர்தனரின் ஆட்சியில், ராமானுச்சாரியார் என்ற வைணவ துறவிக்கு பாடம் கற்பிக்க கோவிலில் ஒரு சிறிய இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. கி.பி., 1210ம் ஆண்டில் ஹொய்சாளா வம்சத்தின் இரண்டாவது மன்னர் வீர பல்லால மன்னர் கோவில் வளாகத்தில் சில புதுப்பித்தல் பணிகளை செய்தார். இதன் பின், விஜயநகர பேரரசு, மைசூரு ராஜ்ஜியத்தின் கட்டடுப்பாட்டில் இருந்தது. கோவிலின் அமைப்பு
கோவில் நுழைவுவாயிலில் ஒரு அற்புதமான கோபுரம், இரண்டு பெரிய பிரகாரங்கள் உள்ளன. கோவில் வளாகத்தில் இரண்டு மண்டபங்கள் உள்ளன. பிரதான சன்னிதியில் விஷ்ணு பகவான் பள்ளி கொண்ட பெருமாளாக இருக்கிறார். அவருக்கு அருகில் மஹாலட்சுமி, ஸ்ரீ பூதேவியும் உள்ளனர். ஸ்ரீனிவாசர், கோபாலகிருஷ்ணர், நரசிம்மர், கருடன், ஹனுமான் ஆகியோருக்கு சிறிய அளவில் தனி சன்னிதிகள் உள்ளன. விதிமுறைகள்
இப்படிப்பட்ட பல வராலற்று சிறப்பு மிக்க கோவிலை தரிசிக்க ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்கள் கட்டாயமாக சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவை, டி ஷர்ட், காற்சட்டை, அணிந்து வரக்கூடாது. பெண்கள் சுடிதார், சேலை போன்றவை மட்டுமே அணிந்து வரவும். மொபைல் போனில் படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவிலில் வாரத்தின் இறுதி நாட்களில் கும்பல் அதிகமாக இருக்கும். சுவாமிக்கு அர்ச்சனை பொருட்களை வாங்கி வர அனுமதி உண்டு. கோவில் காலை 7:30 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும். கோவிலில் நுழைய பக்தர்களுக்கு அனுமதி இலவசம். விரைவு தரிசனத்திற்கு 250 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
29-Apr-2025