உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கேமரா ஆர்டர் செய்த நபருக்கு பார்சலில் வந்தது சோப் பவுடர்

 கேமரா ஆர்டர் செய்த நபருக்கு பார்சலில் வந்தது சோப் பவுடர்

ஹூப்பள்ளி: ஆன்லைன் ஷாப்பிங் செயலியில் 60,000 ரூபாய் மதிப்புள்ள கேமரா ஆர்டர் செய்தவருக்கு 2 பாக்கெட் சோப் பவுடர் வந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்து உள்ளது. ஹூப்பள்ளியை சேர்ந்த தொழிலதிபர் ஆல்பிரட். இவர், தனது நெருங்கிய நண்பருக்கு பரிசளிப்பதற்காக 'அமேசான்' செயலியில் சில தினங்களுக்கு முன் கேமராவை 'ஆர்டர்' செய்தார். 60,990 ரூபாய் மதிப்புள்ள கேமராவை ஆர்டர் செய்திருந்தார். இந்த பார்சல் கூரியர் மூலம் நேற்று முன்தினம் அவரது கைக்கு வந்து சேர்ந்தது. அட்டை பெட்டிக்குள் கேமராவுக்கு பதிலாக 2 பாக்கெட் சோப் பவுடர் பாக்கெட் இருந்தது. இதை பார்த்த ஆல்பிரட் அதிர்ச்சியின் உச்சத்திற்கு போனார். இது குறித்து, அமேசான் நிறுவனத்தில் புகார் அளித்தார். ஆனால், நிறுவனத்திடம் இருந்து சரியான பதில் எதுவும் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் கூறியதாவது: நான் துபாயில் இருந்த போது, பல முறை அமேசான் நிறுவனத்தில் பல முறை ஆர்டர் செய்து பொருட்களை வாங்கி உள்ளேன். ஆனால், ஒரு முறை கூட இப்படி நடந்தததில்லை. முதல் முறையாக ஏமாற்றப்பட்டு உள்ளேன். நிறுவனம் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. நிறுவனம் நிச்சயம் நஷ்ட ஈடு தர வேண்டும். சைபர் போலீசில் புகார் அளி க்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ