உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அரசு மருத்துவமனையை கண்டித்து பாடை ஊர்வலம்

 அரசு மருத்துவமனையை கண்டித்து பாடை ஊர்வலம்

தங்கவயல்: தங்கவயலில் உள்ள அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்கள், மருந்துகள், ஆம்புலன்ஸ் இல்லாததால் சிகிச்சைக்காக செல்வோர் உயிரிழந்து பிணமாவதை விளக்கும் வகையில் பாடையுடன் ஊர்வலம் நடந்தது. ராபர்ட்சன்பேட்டை காந்தி சதுக்கத்தில் இருந்து நேற்று காலையில் ஆர்.கே.பவுண்டேஷன் பொதுநல அமைப்பு சார்பில், தலைவர் மோகன் கிருஷ்ணா தலைமையில் ஊர்வலம் நடந்தது. மருத்துவமனை எதிரில் சாமியானா பந்தல் அமைத்து, அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து தர்ணா நடத்தினர். சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பிணமாக திரும்பும் சம்பவம் தினமும் நடப்பதை குறிக்கும் வகையில், உருவ பொம்மை செய்து பாடையில் வைத்து துாக்கி வந்து தர்ணாவில் வைத்தனர். வக்கீல் ஜோதிபாசு, மோகன் கிருஷ்ணா ஆகியோர், மருத்துவமனையில் சிகிச்சை கிடைக்காத அவலங்கள் குறித்து விளக்கி பேசினர். தர்ணாவில் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை