மேலும் செய்திகள்
என்னை கொல்ல முயற்சி: அமைச்சர் மகன் அலறல்
28-Mar-2025
பெங்களூரு: துணை முதல்வர் சிவகுமாரை, அமைச்சர் ராஜண்ணா மகன் ராஜேந்திரா நேற்று திடீரென சந்தித்துப் பேசினார்.துணை முதல்வர் சிவகுமாருடன், கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். தன்னை ஹனி டிராப் செய்ய முயற்சி நடந்தது பற்றி கடந்த மாதம் சட்டசபையில் ராஜண்ணா கூறினார்.இதுபற்றி ஊடகத்தினருக்கு பேட்டி அளித்த சிவகுமார், 'ஹலோ என்று கூறினால் எதிர்முனையில் பேசுபவர்களும், ஹலோ என்று தான் சொல்வர்' என, கிண்டலடிக்கும் வகையில் பதில் கூறினார். இது இருவருக்கும் இடையிலான மோதலை மேலும் அதிகரித்தது.சிவகுமாரின் கருத்துக்கு எதிராக, ராஜண்ணாவின் மகனும், காங்கிரஸ் எம்.எல்.சி.,யுமான ராஜேந்திராவும் சில வார்த்தைகளை கூறினார்.இதையடுத்து தன்னை கொல்ல சதி நடந்ததாக, ராஜேந்திரா போலீசில் புகார் செய்தார். ஹனி டிராப், கொலை முயற்சியில் சிவகுமாருக்கு தொடர்பு இருப்பதாக, பா.ஜ., தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.இந்நிலையில் பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீட்டில், சிவகுமாரை, ராஜேந்திரா நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். இருவரும் 15 நிமிடங்கள் பேசினர். பின், வெளியே வந்த ராஜேந்திரா ஊடகத்தினரிடம் எதுவும் பேசாமல், காரில் ஏறிச் சென்றுவிட்டார்.சந்திப்பு பற்றி சிவகுமார் தரப்பில் இருந்தும் எந்த விளக்கமும் வரவில்லை.இது ஒரு பக்கம் இருக்க, தாவணகெரே பா.ஜ., முன்னாள் எம்.பி., சித்தேஸ்வர், ஹரிஹரா எம்.எல்.ஏ., ஹரிஷ் நேற்று முன்தினம் சிவகுமாரை சந்தித்துப் பேசினர்.முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகனும், ஷிவமொக்கா பா.ஜ., - எம்.பி.,யுமான ராகவேந்திரா, சிவகுமாரை நேற்று சந்தித்தார். ராகவேந்திரா அளித்த பேட்டியில், ''என் மகன் திருமணத்திற்கு பத்திரிகை கொடுக்க வந்தேன். ஷிவமொக்காவில் நடக்க வேண்டிய சில பணிகள் குறித்தும் பேசினோம். வளர்ச்சி தொடர்பாக துணை முதல்வரை சந்திப்பதில் எந்த தவறும் இல்லை,'' என்றார்.
28-Mar-2025