சிறுவர்களுக்கு ஆதார் பதிவு
கோலார்: கோலார் மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவி கூறியதாவது: கோலார் மாவட்டத்தில் அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை அவசியம். இதில் பயோமெட்ரிக் முறையில் 5 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் 62,246 பேர் சரி பார்க்க வேண்டியுள்ளது. பயோ மெட்ரிக் மூலம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். எனவே, பெற்றோர் தம் பிள்ளைகளின் ஆதார் எண், அது தொடர்பான ஆவணங்களுடன் ஆதார் மையங்களுக்கு சென்று பயோமெட்ரிக் முறையில் புதுப்பிக்கலாம். பள்ளி, கல்லுாரிகளில் சேர்க்கை, பொது தேர்வுகள், பயிற்சி, கல்வி உதவித் தொகை, அரசு திட்டங்கள் ஆகியவற்றிற்கு ஆதார் அடையாள அட்டை மிக அவசியம். அனைத்து ஆதார் மையங்களிலும் செப்டம்பர் 30க்குள் புதுப்பித்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.