மேலும் செய்திகள்
ரேணுகாசாமி குழந்தைக்கு பெயர் சூட்டு விழா
24-Feb-2025
கொலை வழக்கில் ஜாமினில் வெளியே உள்ள நடிகர் தர்ஷன், கேரளாவில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தியதாக, தகவல் வெளியாகியுள்ளது.தனக்கு நெருக்கமான பவித்ரா கவுடாவுக்கு, ஆபாச மெசேஜ் அனுப்பி தொந்தரவு கொடுத்ததால், சித்ரதுர்காவின் ரேணுகாசாமியை கொலை செய்ததாக நடிகர் தர்ஷன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமின் பெற்று அவர் தற்போது வெளியே உள்ளார்.கைது காரணமாக பாதியில் நின்றிருந்த 'டெவில்' திரைப்பட படப்பிடிப்பிலும் அவர் பங்கேற்றார். இந்நிலையில் தர்ஷன், தன் மனைவி விஜயலட்சுமி, மகன் வினிஷ், நடிகர் தன்வீர் உட்பட சில நண்பர்களுடன் கேரளாவுக்கு சென்றுள்ளார். இங்குள்ள பிரசித்தி பெற்ற கண்ணுாரில் உள்ள மதாயி திருவற்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார். மேலும் அங்கு அவர் சத்ரு சம்ஹார யாகம் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.சிறையில் இருந்தபோது, தர்ஷன் ஜாமின் கிடைத்து விடுதலையாக வேண்டும் என, அவரது மனைவி விஜயலட்சுமி பல கோவில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தது குறிப்பிடத்தக்கது. - நமது நிருபர் -
24-Feb-2025