உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பிரியங்க் கார்கேவுக்கு புத்திமதி

பிரியங்க் கார்கேவுக்கு புத்திமதி

காங்கிரசில் உள்ள பெரும் தலைவர்களில் ஒருவர் ப.சிதம்பரம். அவர் உள்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். அவர் தற்போதும் காங்கிரசிலே உள்ளார். அவரே, 'காங்கிரஸ் கடந்த காலங்களில் முட்டாள் தனமாக செயல்பட்டது' என்றார். பிரியங்க் கார்கே, ஞானிகளுக்கும் மேலானவர். அவர் முதலில் சிறிது வரலாறு படித்துவிட்டு ஆர்.எஸ்.எஸ்., குறித்து பேச வேண்டும். அவர் கர்நாடகாவில் நடக்கும் குற்றங்கள் குறித்து பேசாமல், வேறு மாநிலங்களில் நடக்கும் சம்பவங்கள் குறித்து பேசுகிறார். ஆப்கானிஸ்தான் அரசுடன் நம் நாடு வர்த்தகம் செய்கிறதே தவிர, தலிபான்களுடன் வியாபாரம் செய்யவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தலிபான்களுக்கு மரியாதை கொடுக்கும் வேலையை பா.ஜ., அரசு ஒரு போதும் செய்யாது. சி.டி.ரவி, பா.ஜ., - எம்.எல்.சி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி