அக்., 18 முதல் 20 வரை தசராவில் விமான கண்காட்சி
பெங்களூரு: மைசூரு தசரா வரும் 11ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை நடக்கிறது. தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மைசூரில் விமான கண்காட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், முதல்வர் சிவகுமார் நேரில் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று கொண்ட ராணுவ அமைச்சகம், விமான கண்காட்சி நடத்த நேற்று அனுமதி வழங்கியது. இதுகுறித்து சிவகுமார் தனது ‘எக்ஸ்’ வலைதள பதிவில், ‘கர்நாடகாவிற்கு ஒரு பெருமைக்குரிய தருணம். இந்த ஆண்டு மைசூரு தசராவில் வரும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை 3 நாட்கள் விமான கண்காட்சி நடக்கிறது. ‘சூர்ய கிரண் ஹெலிகாப்டர் சாகச குழுவினர், மைசூரு மக்களை மகிழ்விக்க உள்ளனர். விமான கண்காட்சி நடத்த ஆதரவு கொடுத்த, ராணுவ அமைச்சருக்கு, அரசு சார்பில் நன்றி.’ என பதிவிட்டுள்ளார்.