உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கட்டட துணை விதிகளில் திருத்தம்: வரைவு அறிக்கை வெளியானது

 கட்டட துணை விதிகளில் திருத்தம்: வரைவு அறிக்கை வெளியானது

பெங்களூரு: கட்டட துணை விதிகளில் திருத்தம் செய்வதற்கான வரைவு அறிக்கையை ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் வெளியிட்டது. இது குறித்து, ஜி.பி.ஏ., வெளியிட்ட அறிக்கை: ஜி.பி.ஏ., வரம்பிற்கு உட்பட்ட பகுதியில் பின்பற்றப்படும் கட்டட துணை விதிகளில் திருத்தம் செய்வதற்கான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை வெளியிடப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் ஆட்சேபனை, ஆலோசனை தெரிவிக்க அவகாசம் வழங்கப்படுகிறது. தற்போது, நகரில் கட்டப்படும் கட்டடங்களில் 5 சதவீதம் விதிமீறல்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதை 15 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டு உள்ளோம். இதையே வரைவு அறிக்கை கூறுகிறது. இது மக்கள் நலன் சார்ந்த முடிவாக இருக்கும். இதன் மூலம் பலரும் பயனடைவர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ