உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அமித்ஷா பலவீனமானவர்

அமித்ஷா பலவீனமானவர்

பெங்களூரு: நம் நாட்டின் உள்துறை அமைச்சர்களிலேயே மிகவும் பலவீனமானவர் என்றால், அமித் ஷா தான் என, கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியுள்ளார். தன் 'எக்ஸ்' பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு: இதுவரை இந்தியாவில் எந்த ஒரு உள்துறை அமைச்சரின் பதவிக் காலத்திலும் சட்டம் - ஒழுங்கு இவ்வளவு மோசமாக சீர்குலைந்தது கிடையாது. அது போல, சம்பவங்களுக்கு பொறுப்பேற்காமல் தொடர்ச்சியாக பதவியில் இருந்ததும் இல்லை. டில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உள்துறை தன் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், திசை திருப்பும் முயற்சியில் பா.ஜ., இறங்கி உள்ளது. இச்சம்பவத்தில் பின்னணி குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும். இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்துறை அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும். காஷ்மீர், மணிப்பூர், புதுடில்லி, புல்வாமா, பஹல்காம், உத்தர பிரதேசம் ஆகிய இடங்களில் நடந்த கொடூர சம்பவங்களின்போது உள்துறை அமைச்சராக பதவி வகித்தது அமித்ஷா தான். இவர் தான் நாட்டிலே உள்துறை அமைச்சர்களில் மிகவும் பலவீனமானவர்களில் ஒருவர். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். எப்படி நடக்கிறது? டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம், பீஹார் தேர்தலில் எதிரொலிக்கும். இச்சம்பவம் பா.ஜ.,வுக்கு எதிராக திரும்பும். இந்த சம்பவத்திற்கு பாதுகாப்பு, உளவுத்துறை தோல்வி காரணமா என்று எனக்கு தெரியாது. விசாரணை அறிக்கை வந்த பின் பேசுகிறேன். தேர்தல் நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும், மீண்டும் எப்படி நடக்கிறது என்பதை, மத்திய அரசு கூற வேண்டும். மைசூரில் யானை - மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுப்போம். வனப்பகுதியை ஒட்டி உள்ள ஊர்களில், ரயில்வே தடுப்புக் கம்பி அமைக்கப்படும். சித்தராமையா, முதல்வர், கர்நாடகா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ