உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பழமையான சிவன் கோவில்

பழமையான சிவன் கோவில்

மடத்தின் வளாகத்தில் இக்கோவில் அமைந்து உள்ளதால், உள்ளே செல்லும் போதே மனதிற்கு அமைதி கிடைக்கிறது. கோவிலுக்கு செல்வதற்கு முன்னதாக நுழைவு வாயிலின் வலதுபுறத்தில் சிறிய மண்டபத்தின் மேல் பகுதியில் பஞ்சமுக விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதன் அருகில் தெப்பகுளம் அமைந்து உள்ளது. தெப்பகுளத்தின் மத்திய பகுதியில், மெகா சைஸ் சிவன், அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார்.

ராஜகோபுரம்

கோவிலுக்குள் நுழையவும், கம்பீரமான ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. அதில் செதுக்கப்பட்டு உள்ள சிற்பங்கள், கட்டடக்கலை, பக்தர்களை ஈர்க்கிறது. விசாலமான கோவில் வளாகம், அமைதியான சூழ்நிலை, தியானம் செய்யவும், ஆன்மிக சிந்தனைக்கும் ஏற்ற இடமாக அமைகிறது.கோவிலின் தனித்துவமான அம்சங்களில் ஒன்றான வில்வ மரம், வெளியே அமைந்து உள்ளது. இம்மரம் ஆன்மிக முக்கியத்துவம் கொண்டதாகும். பக்தர்கள் பெரும்பாலும், இந்த வில்வ இலைகளை, பண்டேஸ்வராவுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். இதன் மூலம் தங்களின் வேண்டுதல் நிறைவேறுவதாக நம்புகின்றனர். கோவிலுக்குள் நுழைந்ததும் எதிரே பண்டேஸ்வரா சுவாமி அருள்பாலிக்கிறார். இடது புறத்தில் அரச மரம் அமைந்து உள்ளது. அதன் கீழ் பகுதியில் நாகதேவி விக்ரஹங்களும்; எதிர் திசையில் பெரிய நந்தி சிலையும் அமைந்து உள்ளது.

மஹா சிவராத்திரி

மஹா சிவராத்திரி, மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அமாவாசையன்று பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். தினமும் காலை 6:00 முதல் 10:30 மணி வரையிலும்; மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.நீங்கள் பக்தராக இருந்தாலும் சரி, பார்வையாளராக இருந்தாலும் சரி, இக்கோவிலின் ஆன்மிக சூழல் மனதுக்கு அமைதி தருவது நிச்சயம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ