உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஆர்.எஸ்.எஸ்., தலைவருக்கு எதிராக பேசியவருக்கு முன்ஜாமின்

 ஆர்.எஸ்.எஸ்., தலைவருக்கு எதிராக பேசியவருக்கு முன்ஜாமின்

பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் கல்லட்கா பிரபாகர் பட் குறித்து அவதுாறாக பேசிய நபருக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கியது. ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் கல்லட்கா பிரபாகர் பட் குறித்து, கடந்த டிசம்பரில் ஷாருக்கான் கொப்பால் என்பவர் ஆட்சேபனைக்குரிய வகையில் பேசினார். இது தொடர்பாக, கல்லட்காவை சேர்ந்த கிருஷ்ணப்பா என்பவர், பன்ட்வால் டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையறிந்த ஷாருக்கான் கொப்பால், மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ஷாருக்கானுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ