உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / செப்., 2ல் பெங்களூரில் கடை திறக்கிறது ஆப்பிள்

செப்., 2ல் பெங்களூரில் கடை திறக்கிறது ஆப்பிள்

பெங்களூரு: பிரபல எலக்ட்ரானிக் நிறுவனமான 'ஆப்பிள்', பெங்களூரில் தன் முதல் சில்லறை விற்பனை கடையை அடுத்த மாதம் 2ம் தேதி துவங்குகிறது. உலகின் முன்னணி மொபைல் நிறுவனமான ஆப்பிள், பெங்களூரு வசந்த் நகர் சாங்கி சாலையில் உள்ள எம்பசி ஜெனித் அடுக்குமாடி கட்டடத்தில், தன் புதிய அலுவலகத்தை திறக்க உள்ளது. இதற்காக 10 ஆண்டுகளுக்கு, 1,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், எலஹங்கா பல்லாரி சாலையில் உள்ள 'பீனிக்ஸ் மால் ஆப் ஆசியா'வில் தன் சில்லறை விற்பனை கடையை, அடுத்த மாதம் 2ம் தேதி ஆப்பிள் நிறுவனம் திறக்கிறது. இதற்கு 'ஆப்பிள் ஹெப்பால்' என பெயரிட்டுள்ளது. இந்த கடையில் அனைத்து விதமான ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளும் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெங்களூரில் தன் முதல் சில்லறை விற்பனை கடையை திறக்கிறது. இது இந்தியாவில் மூன்றாவது சில்லறை விற்பனை கடையாகும். முன்னதாக மும்பை, புதுடில்லியில் கடைகளை ஆப்பிள் நிறுவனம் திறந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, ஐ - போன் 17 மாடல் மொபைல் போன்களும் அடுத்த மாதம் வெளியாக உள்ளதால், பெங்களூரில் கடையை திறந்து அதீத லாபத்தை ஈட்ட நிறுவனம் தயாராகி உள்ளது தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி