உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  புதிதாக 1,243 மின்சார வாகன சார்ஜிங் பாயின்ட்க்கு அனுமதி

 புதிதாக 1,243 மின்சார வாகன சார்ஜிங் பாயின்ட்க்கு அனுமதி

பெங்களூரு: கர்நாடகாவில் புதிதாக, 1,243 மின்சார வாகன, 'சார்ஜிங் பாயின்ட்'கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. மின்சார வாகன உரிமையாளர்கள் சார்ஜிங் பாயின்ட்களின் இருப்பிடத்தை கண்டறியும், பாரத் சார்ஜ் செயலியை மத்திய அரசு நேற்று முன்தினம் அறிமுகம் செய்தது. இச்செயலியில், அனைத்து தனியார் நிறுவனங்களின் சார்ஜிங் பாயிண்ட்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். கர்நாடகாவில் புதிதாக 1,243 சார்ஜிங் பாயின்ட்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. இதற்கு, 123 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இது, பிரதமர் மோடியின், 'இ - டிரைவ்' திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அரசு, தனியார் நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் கீழ் சார்ஜிங் பாயிண்ட்கள் நிறுவப்படும். இவை, மின்சார வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தியாக அமைந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை