உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கைதான யோகா  ஆசிரியருக்கு பல பெண்களுடன் தொடர்பு 

கைதான யோகா  ஆசிரியருக்கு பல பெண்களுடன் தொடர்பு 

ஆர்.ஆர்.நகர்: சிறுமி பலாத்கார வழக்கில், கைதான யோகா ஆசிரியர், பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக, குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது. பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் வசிப்பவர் நிரஞ்சன் மூர்த்தி, 52; யோகா ஆசிரியர். சன்ஷைன் இன்ஸ்டிடியூட் என்ற பெயரில், யோகா மையம் நடத்துகிறார். இங்கு 17 வயது சிறுமி யோகா பயிற்சி பெற்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் மையத்தில் சிறுமியும், நிரஞ்சன் மூர்த்தியும் தனியாக இருந்தனர். தேசிய அளவில் நடக்கும் யோகா போட்டிகளில் பங்கேற்க வைப்பதாக, ஆசை வார்த்தை கூறி சிறுமியை, நிரஞ்சன் மூர்த்தி பலாத்காரம் செய்தார். ஒரு சில நாட்கள் கழித்து மீண்டும் பலாத்காரம் செய்ய முயன்றார். இதுபற்றி சிறுமி, தன் பெற்றோரிடம் கூறினார். கடந்த செப்டம்பர் 14ம் தேதி சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், ஐந்து நாட்கள் கழித்து நிரஞ்சன் மூர்த்தியை போலீசார் கைது செய்தனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவர், பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டது தெரிந்தது. நிரஞ்சன் மூர்த்தியின் மொபைல் போனை வாங்கி, போலீசார் ஆய்வு செய்த போது, பல பெண்களுடன் அவர் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சிக்கின. வீடியோவில் இருந்த பெண்களை தொடர்பு கொண்டு, போலீசார் பேசிய போது, குடும்ப மானத்திற்கு பயந்து யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை. இருந்தாலும் சிறுமி குடும்பத்தினர் அளித்த புகாரில் பதிவான வழக்கில், நிரஞ்சன் மூர்த்தி மீது போக்சோ வழக்கை விசாரிக்கும், விரைவு நீதிமன்றத்தில் கடந்த 7ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை மேற்கு மண்டல டி.சி.பி., கிரிஷ் நேற்று உறுதி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி