உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  உதவி பேராசிரியை அந்தமானில் மரணம்

 உதவி பேராசிரியை அந்தமானில் மரணம்

தார்வாட்: குடும்பத்துடன் அந்தமான் சென்றிருந்த தனியார் கல்லுாரி உதவி பேராசிரியை, மாரடைப்பால் உயிரிழந்தார். தார்வாட் நகரை சேர்ந்தவர் அன்னபூர்ணா, 50; கே.சி.டி., கல்லுாரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார்; கல்லுாரியின் 'காவேரி விடுதி' வார்டனாகவும் இருந்தார். தன் குடும்பத்தினருடன் மூன்று நாள் பயணமாக, நேற்று முன்தினம் அந்தமான் தீவுக்கு சென்றார். அன்றிரவு அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறினர். இத்தகவல் தார்வாடில் உள்ள அவரின் உறவினர்களுக்கும், கல்லுாரி நிர்வாகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. இன்று அவரது உடல், விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ