உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அதர்வா, கைரா சாம்பியன் 

 அதர்வா, கைரா சாம்பியன் 

டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் அதர்வா நவரஞ்சேவும், பெண்கள் பிரிவில் கைரா பாலிகாவும் சாம்பியன் பட்டம் வென்றனர். பெங்களூரு ரூரல் மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கத்தின் சார்பில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான, டேபிள் டென்னிஸ் போட்டி கடந்த மாதம் 30ம் தேதி துவங்கியது. லீக் போட்டிகள் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் காலை அரையிறுதி போட்டிகள் நடந்தன. இப்போட்டியில் வெற்றி பெற்று ஆண்கள் பிரிவில் அதர்வா நவரஞ்சேவும், கவுரவ் கவுடாவும்; பெண்கள் பிரிவில் கைரா பாலிகாவும் - ஹிமான்சு சவுத்ரியும் இறுதி போட்டிக்கு சென்றனர். இறுதி போட்டியில் அதர்வா - கவுரவ் இடையில் நடந்த மோதலில், ஆரம்பத்தில் பின்னடைவில் இருந்த அதர்வா மீண்டு வந்தார். கவுரவை 3 - 11; 9 - 11; 11 - 6; 11 - 5; 11 - 6 என்ற நேர் செட்டில் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். பெண்கள் பிரிவில் 11 - 5; 11 - 9; 6 - 11; 11 - 9 என்ற நேர் செட் கணக்கில் ஹிமான்சு சவுத்ரியை தோற்கடித்து, கைரா பாலிகா சாம்பியன் ஆனார். டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில் பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கி இருவரும் கவுரவிக்கப்பட்டனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ