மேலும் செய்திகள்
சங்கராபுரத்தில் மணல் திருட்டு
07-Oct-2025
யாத்கிர்: ''மணல் கடத்தலை தடுக்க முயற்சித்த ஏ.எஸ்.ஐ.,யை கொள்ளையர் கடத்திச் சென்றுள்ளனர். சுர்புராவில் போலீசாருக்கு கூட பாதுகாப்பு இல்லை. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது,'' என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ராஜு கவுடா தெரிவித்தார். யாத்கிரில் நேற்று அவர் அளித்தபேட்டி: யாத்கிர் மாவட்டம், சுர்புராவில் உள்ள கிருஷ்ணா நதியில், சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. இதை தடுக்க முயற்சிக்கும் போலீசாரும் தாக்கப்படுகின்றனர். இதுபோன்று, 10 - 12 நாட்களுக்கு முன், மணல் கடத்தல் குறித்து ஏ.எஸ்.ஐ., நிங்கண்ணாவுக்கு தகவல் கிடைத்தது. போலீசாருடன் அங்கு சென்ற அவரை, மணல் கடத்தல்காரர்கள் தாக்கி, நிங்கண்ணாவை தங்கள் லாரியில் கடத்திச் சென்றனர். ஒரு அரசியல் செல்வாக்கு மிக்கவரின் பண்ணை வீட்டில், அவரை கட்டிப் போட்டு அடித்துள்ளனர். அத்துடன், கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து, அதை வீடியோகவும் பதிவு செய்துள்ளனர். அன்றிரவே, கூடுதல் போலீசார், பண்ணை வீட்டுக்கு சென்று, அரசியல் செல்வாக்கு மிக்கவரின் முன் மண்டியிட்டு, நிங்கண்ணாவை விடுத்துள்ளனர். உயிர் அச்சுறுத்தல் காரணமாக, அந்நபர் மீது நிங்கண்ணா புகார் அளிக்க தயங்குகிறார். மணல் கடத்தலை தடுக்க முயற்சித்த ஏ.எஸ்.ஐ., கொள்ளையர்கள் கடத்தி சென்றுள்ளனர். சுர்புராவில் போலீசாருக்கு கூட பாதுகாப்பு இல்லை. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, எஸ்.பி., பிரித்விக் சங்கர் கூறுகையில், ''ஏ.ஐ.எஸ்., கடத்தல், தாக்குதல் தொடர்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டு உள்ளேன். சம்பவம் உறுதி செய்யப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்,'' என்றார்.
07-Oct-2025