உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரூ.4 கோடி வீட்டை அபகரிக்க முயற்சி; இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேர் மீது வழக்கு

ரூ.4 கோடி வீட்டை அபகரிக்க முயற்சி; இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேர் மீது வழக்கு

பெங்களூரு; தொழிலதிபரின், 4 கோடி ரூபாய் மதிப்பு வீட்டை, 60 லட்சம் ரூபாய்க்கு, தன் பெயருக்கு மாற்ற முயற்சித்த அன்னபூர்னேஸ்வரி நகர் இன்ஸ்பெக்டர், இரு ஏட்டுகள் உட்பட ஏழு பேர் மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.பெங்களூரு, அன்னபூர்னேஸ்வரி நகரை சேர்ந்தவர் கான்ட்ராக்டர் சன்னேகவுடா. இவர் மீது பதிவான மோசடி வழக்கு தொடர்பாக, அன்னபூர்னேஸ்வரி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சன்னேகவுடாவை தொடர்பு கொண்டார்.அப்போது குமார், 'உங்கள் மீது பதிவான வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தில் குற்றமற்றவர்' என்ற அறிக்கை தாக்கல் செய்கிறேன். இதற்காக உங்கள் வீட்டை என் பெயருக்கு எழுதி தர வேண்டும்' என்றார். இதற்கு சன்னேகவுடா, '4 கோடி ரூபாய் மதிப்பு வீட்டை எழுதி தர முடியாது' என்று மறுத்துவிட்டார்.கோபம் அடைந்த இன்ஸ்பெக்டர், '60 லட்சம் ரூபாய்க்கு வீட்டை கொடுக்கவில்லை என்றால், பொய் வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ளிவிடுவேன்' என்று மிரட்டி உள்ளார்.பொறுமை இழந்த சன்னேகவுடா, லோக் ஆயுக்தா போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, நாகரபாவியில் உள்ள ஹோட்டலில் வைத்து, 60 லட்சம் ரூபாய்க்கு வீட்டை தன் பெயருக்கு மாற்ற இன்ஸ்பெக்டர் குமார் முயற்சித்தார்.அப்போது அங்கு வந்த லோக் ஆயுக்தா போலீசார், அன்னபூர்னேஸ்வரி நகர் போலீஸ் நிலைய ஏட்டுகள் உமேஷ், ஆனந்த் மற்றும் கவிகவுடா, திவ்யா, சோமசேகர், தினேஷ் ஆகியோரை கைது செய்தனர். இன்ஸ்பெக்டர் குமார், தப்பியோடி தலைமறைவானார்.இச்சம்பவத்தில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் குமார், ஏட்டுகள் ஆனந்த், உமேஷ், கவிகவுடா, திவ்யா, சோமசேகர், தினேஷ் ஆகிய ஏழு பேர் மீது லோக் ஆயுக்தா போலீசார் நேற்று எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.இன்ஸ்பெக்டர் குமார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், பொது சேவையில் ஈடுபட்டு, லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக, ஏழு ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி