உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / முள்ளய்யனகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அதிரடி தடை

முள்ளய்யனகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அதிரடி தடை

சிக்கமகளூரு : பிரசித்தி பெற்ற முள்ளய்யனகிரி பகுதியில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தி, வீசியெறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம்உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக, சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் மீனா நாகராஜ் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:முள்ளய்யனகிரி பகுதிகளில், ஒருமுறை பயன்படுத்தி, வீசி எறியும்பிளாஸ்டிக் பொருட்களை பயட்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.உணவு, சிற்றுண்டி கொண்டு வரும் பிளாஸ்டிக் கவர், குடிநீர் பாட்டில்கள், சிப்ஸ் பாக்கெட்டுகள், குட்கா பாக்கெட்டுகள் உட்பட, மற்ற பிளாஸ்டிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இவற்றை பயன்படுத்த மட்டுமின்றி, விற்பனைக்கும் இந்த உத்தரவு பொருந்தும். மாவட்ட நிர்வாகத்தின் அடுத்தஉத்தரவு வரும் வரை, இந்த உத்தரவு அமலில் இருக்கும். பிரசித்தி பெற்ற முள்ளய்யனகிரி பகுதியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது.உத்தரவை மீறினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை