உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஷிவமொக்கா எம்.பி.,யுடன் இலங்கை குழுவினர் சந்திப்பு

 ஷிவமொக்கா எம்.பி.,யுடன் இலங்கை குழுவினர் சந்திப்பு

ஷிவமொக்கா: ஷிவமொக்கா பா.ஜ., - எம்.பி., ராகவேந்திராவின் இல்லத்துக்கு, இலங்கை எம்.பி., சிவஞானம் ஸ்ரீதரன் வருகை தந்தார். இலங்கை எம்.பி., சிவஞானம் ஸ்ரீதரன் தலைமையிலான குழுவினர், கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். ஷிவமொக்கா பா.ஜ., - எம்.பி., ராகவேந்திராவின் இல்லத்துக்கு நேற்று வருகை தந்தனர். தன் இல்லத்துக்கு வருகை தந்த அவர்களை எம்.பி., ராகவேந்திரா, சம்பிரதாயப்படி வரவேற்பு அளித்து கவுரவித்தார். இந்தியா - இலங்கை இடையிலான, நீண்ட கால நல்லுறவு, இரண்டு நாடுகளின் அரசியல் சூழ்நிலை உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து, தகவல்களை பகிர்ந்து கொண்டனர். மலைப்பகுதி மாவட்டங்களின் விவசாய நடைமுறை, சுற்றுலா, வரலாற்றை பற்றி, இலங்கை குழுவினர் பாராட்டி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ