உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பீட்ரூட் ஜவ்வரிசி பாயசம்

 பீட்ரூட் ஜவ்வரிசி பாயசம்

- நமது நிருபர் -: கோடை விடுமுறையில் குழந்தைகள் வீட்டில் இருப்பதால், அவர்களுக்கு மாலை நேரத்தில் சுவையான, ஆரோக்கியமான உணவுகளை சமைத்து கொடுப்பதால், அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த வாரம் பீட்ரூட் ஜவ்வரிசி பாயசம் செய்து பார்க்கலாம். தேவையான பொருட்கள் l பீட்ரூட் - இரண்டு கப் l ஜவ்வரிசி - ஒரு கப் l சர்க்கரை - ஒரு கப் l ஏலக்காய் துாள் - அரை டேபிள் ஸ்பூன் l பால் - ஒரு கப் l முந்திரி - 10 l திராட்சை - 10 செய்முறை முதலில் ஒரு கப் ஜவ்வரிசியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பீட்ரூட்டை சிறிதாக துருவி, தனியாக எடுத்து கொள்ளுங்கள். இதையடுத்து, பாதி பீட்ரூட் பிழிந்து, ஜூஸ் எடுத்துக்கொள்ளுங்கள். அந்த ஜூசில் ஜவ்வரிசியை வேக வைக்க வேண்டும். சிறிய பாத்திரத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து, அதில் துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இந்த பீட்ரூட் நன்றாக வதக்கிய பின், அதில் ஒரு கப் பால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பீட்ரூட்டை நன்றாக வேக வைக்க வேண்டும். பீட்ரூட் நன்றாக வெந்த பிறகு ஜவ்வரிசியை இதில் சேர்க்கவும். ஜவ்வரிசியை நன்றாக கிளறி விடவும். இதையடுத்து இதில் ஒரு கப் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இத்துடன் அரை டேபிள் ஸ்பூன் ஏலக்காய் துாள் சேர்த்து கிளறவும். இறுதியில், நெய்யில் பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுத்த முந்திரிப்பருப்பு, திராட்சை சேர்த்து கலந்து இறக்கினால், சுவையான பீட்ரூட் பாயசம் ரெடி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை