உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்திக்கு பெங்களூரு - பெலகாவி சிறப்பு ரயில்

சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்திக்கு பெங்களூரு - பெலகாவி சிறப்பு ரயில்

பெங்களூரு: 'சுதந்திர தினம் மற்றும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, பயணியர் வசதிக்காக, யஷ்வந்த்பூரில் இருந்து கோவாவின் மட்கானுக்கும்; எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து பெலகாவிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன' என தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:  ரயில் எண் 06541: யஷ்வந்த்பூர் - மட்கான் விரைவு ரயில், ஆக., 14ல் யஷ்வந்த்பூரில் இருந்து இரவு 11:55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 6:05 மணிக்கு மட்கானுக்கு சென்றடையும் மறுமார்க்கத்தில், எண் 06542: மட்கான் - யஷ்வந்த்பூர் விரைவு ரயில், ஆக., 17 ல் மட்கானில் இருந்து இரவு 10:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4:30 மணிக்கு யஷ்வந்த்பூர் வந்தடையும்  எண் 06571: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - பெலகாவி சிறப்பு ரயில், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து, ஆக., 22ம் தேதி இரவு 7:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:30 மணிக்கு பெலகாவி சென்றடையும் மறுமார்க்கத்தில் எண் 06572: பெலகாவி - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு சிறப்பு ரயில், பெலகாவியில் இருந்து ஆக., 23ம் தேதி மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூரு வந்தடையும்  எண் 06573: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - பெல காவி விரைவு ரயில், எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து ஆக., 26ம் தேதி இரவு 7:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:25 மணிக்கு பெலகாவி சென்றடையும். மறுமார்க்கத்தில் பெலகாவி - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு விரைவு ரயில், பெலகாவியில் இருந்து ஆக., 27ம் தேதி மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூரு வந்தடையும். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை