உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரு - பீதர் ரயில் சேவை நீட்டிப்பு

பெங்களூரு - பீதர் ரயில் சேவை நீட்டிப்பு

பெங்களூரு: தென்மேற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:பெங்களூரு எஸ்.எம்.வி.டி., ரயில் நிலையத்தில் இருந்து, பீதருக்கு தினசரி சிறப்பு ரயில் - எண்: 06539 இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை கடந்த மாதம் 29ம் தேதியுடன் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூலை 4ம் தேதி முதல், அடுத்த மாதம் 31ம் தேதி வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது.அதேபோல், மறுமார்க்கத்தில் பீதர் - எஸ்.எம்.வி.டி., ரயில் - எண்: 06540 இம்மாதம் 5ம் தேதி முதல், செப்டம்பர் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.எஸ்.எம்.வி.டி.,யில் இருந்து அசாம் மாநிலம், நரேங்கி வரை, வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் எக்ஸ்பிரஸ் ரயில் - எண்: 06559 இயக்கப்பட்டு வந்தது.இந்த ரயில் சேவையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 8, 15ம் தேதிகளில் ரயில் புறப்படும். நரேங்கியில் இருந்து 12, 19ம் தேதிகளில், எஸ்.எம்.வி.டி.,க்கு ரயில் புறப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி