உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெங்களூரு குடும்பத்தினர் பீஹாரில் தற்கொலை

 பெங்களூரு குடும்பத்தினர் பீஹாரில் தற்கொலை

பெங்களூரு: பெங்களூரு சோழதேவனஹள்ளியின், விநாயகா லே -அவுட்டில் வசித்தவர் நாகபிரசாத், 50. இவரது வீட்டிலேயே தங்கை ஷில்பாவும், தன் மகன் அமோக கீர்த்தி,14, உடன் வசித்து வந்தார். அமோக் கீர்த்தி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையானதால், தினமும் தன் மாமா நாகபிரசாத்திடம் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளார். இது, அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த நாகபிரசாத், கத்தியால் சிறுவனின் கழுத்தை அறுத்து கொன்றார். இதனால், கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நாகபிரசாத்தை, அவரது தங்கை ஷில்பா ஜாமி னில் வெளியே கொண்டு வந்தார். தங்கை மகனை கொன்றதால், நாகபிரசாத்தும் மன அழுத்தத்துக்கு ஆளானார். குடும்பத்துடன் கோவில், கோவிலாக சென்றார். சமீபத்தில், நாகபிரசாத், தன் தாய் சுமங்களா, 78, சகோதரிகள் ஷில்பா, 48, ஷ்ருதா, 43, உடன், பீஹாருக்கு சென்றார். பீஹாரின் ராஜ்கீரில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த நால்வரும், இரண்டு நாட்களுக்கு முன் துாக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ